’செயல் தலைவர், செயல்படாத தலைவர்’.. ஸ்டாலினை விமர்சித்த அழகிரி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 25, 2018 03:51 PM
Stalin is Non-Working president of DMK Says Azhagiri

மதுரையில் மூத்த திமுக கட்சியாளர்கள் மற்றும் தன்னுடைய விசுவாசிகளுடனான  ஆலோசனைக்கு பிறகு கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி அளித்துள்ள பேட்டியில் பரபரப்பான பாய்ண்டுகளை அள்ளி வீசியுள்ளார்.

 

அதில் குறிப்பாக, ‘ திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பின் எத்தனை தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது?’ என்று கேள்வி எழுப்பினார். ’ஆகையால் செயல்படாத ஒரு தலைவராகத்தான் செயல் தலைவர் ஸ்டாலின் இருக்கிறார்’ என்று கூறிய அழகிரி ' மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக திமுக தலைவர் பதவியை ஏற்க முனைகிறார்’ என்று விமர்சித்ததோடு தன்னை கட்சியில் மீண்டும் சேர்க்காவிட்டால் அதே நிலைதான் திமுகவிற்கு நீடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

 

மேலும் சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களில், ‘மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உயிரோடு இருந்தபோதே கட்சி பதவிக்கு ஆசைப்படவில்லை,  இப்போதா நான் கட்சி பதவிக்கு ஆசைப்பட போகிறேன்?’ என்று கூறியதோடு வரும் செப்டம்பர் 5ம் தேதி நடக்கவுள்ள பேரணிக்கு பிறகு மக்கள் தன்னை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என தெரியும் என்றும் கூறியுள்ளார்.

 

 

Tags : #MKSTALIN #DMK #MKARUNANIDHI #MKAZHAGIRI