திமுக’வில் சேர்க்கவில்லை என்றால், விளைவுகள் கடுமையாக இருக்கும்.. அழகிரி எச்சரிக்கை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 27, 2018 01:42 PM
The repercussions will be bad if DMK does not include us says Azhagiri

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களுக்கு முன் மறைந்தார். இதனை அடுத்து திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்த தலைவராக யார் பதவி ஏற்பது என்கிற பேச்சு தொடங்கியது. 

 

கட்சி நிர்வாகிகளும் மூத்தவர்களும் கலந்து ஆலோசித்து, திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை வரும் ஆகஸ்டு 28ம் தேதி போட்டியின்றி தேர்வு செய்யவுள்ளதாக  முந்தைய கூட்டத்தில் பேசியிருந்தனர். 

 

இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, ‘திமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க, கருணாநிதி நினைவிடம் நோக்கி வரும்செப்டம்பர் 5ம் தேதி பேரணி நடைபெறுகிற உள்ளதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ’தலைவர் கலைஞர்  இல்லாத திமுக கட்சியை காப்பாற்ற நாங்கள் களம் இறங்கியிருக்கிறோம்’ என்றும் கட்சியில் தன்னை சேர்க்கவில்லை எனில் பின்னர், அதனால் உண்டாகும் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் என்றும் மு.க.அழகிரி பேசியுள்ளார். 

Tags : #MKSTALIN #DMK #MKARUNANIDHI #MKAZHAGIRI