மீண்டும் அரசியல் பணி செய்ய வந்த விஜய்காந்த் பற்றி திருமாவளவன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 25, 2018 11:49 AM
Thirumavaavan Talks about DMDK Leader Vijaykanth

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவரும், கேப்டன் என்று அழைக்கப்படுபவருமான நடிகர், அரசியலாளர் விஜய்காந்த்திற்கு வாழ்த்துக்கள் தெர்வித்துள்ளார். 

 

தேமுதிக தலைவர் விஜய்காந்த், சில நாட்களுக்கு முன்பாக தொண்டையில் பிரச்சனை உண்டானதால் அவதிப்பட்டார். மேடைகளில் பேசும்போது கூட, அவரது வார்த்தைகளில் தெளிவில்லாத் தன்மை இருந்து வந்தது. 

 

இந்த உடல்நலக் குறைவு காரணமாக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றிருந்தார் நடிகர் விஜய்காந்த். தமிழ்நாட்டில் கலைஞர் மறைந்த அதே நேரத்தில் விஜய்காந்த் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இதனை அடுத்து தமிழகம் வந்த முதல் வேளையாக நள்ளிரவிலேயே சென்று கலைஞர் நினைவிடத்தை அடைந்து மலர் தூவி மரியாதை செலுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார். 

 

இந்நிலையில், விஜயகாந்த் உடல்நலம் பெற்று மீண்டும் அரசியல் பணி செய்ய வந்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாகக் கூறி, மேலும்  அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் உரித்தாக்கியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். 

 

முந்தைய தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் வைகோவின் தலைமையில் உருவாக்கப்பட்ட தேர்தல் கூட்டணியில் விஜய்காந்த், திருமாவளவன் இருவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags : #VIJAYAKANTH #DMKDK #THIRUMAVALAVAN