‘8-க்குள்ள உலகம் இருக்கு ராமையா?’ ரகசியம் வெளியான 3 நாட்களின் அபார சாதனை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 15, 2019 03:29 PM

ரூ.20000 மாத சம்பளம் பெறும்போதும் கூட, சகல வசதிகளுடன் கூடிய சொகுசான சொந்த அபார்ட்மெண்ட் வாங்கலாம் என்கிற விளம்பரம் சமீபத்தில் சென்னை மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

suspense-filled Ad campaign, 8 Kulla Ulagam Irukku Ramaiya

‘எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா’ என்கிற டேக்-லைனில் நடிகர் தம்பி ராமையா நடித்திருந்த புரோமோ விளம்பரம் சென்னையையே கலக்கியதோடு, பலரின் சிந்தனையையும் தூண்டிவிட்டிருந்தது. அந்த ரகசியத்தை தெரிந்துகொள்ளும் ஆர்வம் பலரிடையே துளிர்விட்டது. இந்த நிலையில் அந்த புரோமோவின் முழுமையான அறிவிப்பை, அந்த விளம்பர படத்தை, தாமதமாக விஜய் ராஜா குழும நிறுவனம் வெளியிட்டது.

அதன் படி மாதம் 20000 ரூபாய் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்கள் மாதத் தவணை செலுத்தி 470 நாட்களுக்குள்ளாக தங்களது அபார்ட்மெண்ட்டை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த அபார்ட்மெண்ட்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில். ‘எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா’ எனும் தலைப்பிற்கு பொருத்தமாக பிப்ரவரி 8 ஆம் தேதியில் ரூ. 8 லட்சத்துக்கான இந்த அபார்ட்மெண்ட்களின் புக்கிங் தொடங்கியது. மூன்றே நாட்கள் நடைபெற்ற இந்த புக்கிங்கில் விஜய் ராஜா குழும  நிறுவனத்திற்கு இதுவரை 50,000 வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டுள்ளது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சிங்கிள் டிஜிட்டில் அபார்ட்மெண்ட் விலை என்று ஒன்று இருந்திராத நிலையில் இந்த ஆஃபர் மக்களை கவரும் என்கிற நோக்கில் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டதாக பலரும் நினைத்திருந்தனர். ஆனால் இதற்குள் இருக்கும் இன்னொரு ரகசியத்தை கட்டவிழ்த்திருக்கிறார் விஜய் ராஜா குழுமத்தின் தலைவர் திரு.செந்தில் நாதன்.

அதன்படி, இந்த கன்ஸ்ட்ரக்‌ஷனுக்கு தேவைப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தங்கள் நிறுவன குழுமங்கள் உற்பத்தி செய்ததாகவும், மேலும் பல உற்பத்தி பொருட்கள் மார்க்கெட் விலை இல்லாமல் நேரடி விலைக்கு வாங்கப்பட்டதாகவும் அறிவித்திருந்தார்.

இதுபோன்ற சொந்த உற்பத்தியில் ரிலையன்ஸ் மற்றும் டாடா நிறுவனம் ஈடுபட்டிருந்த நிலையில், அந்நிறுவனங்களுக்கு பிறகு தாங்கள் அதே பாணியில் ஈடுபட்டிருப்பதை பெருமிதமாகக் கருதுவதாகவும் அவர்  கூறியுள்ளார். ஓஎம்ஆர், திருப்போருர் பகுதியில் பள்ளி, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட சகல வசதிகளும் அருகே அமையப்பெற்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த அபார்ட்மெண்ட்கள் பலரின் விருப்பத்தையும் கவர்ந்துள்ளது.

Tags : #CHENNAI #VIJAYRAJA #8KULLAULAGAMIRUKURAMAIYA