‘நீங்க முரட்டு சிங்கிளா? அப்போ உங்களுக்கு பிரியாணி இலவசம்’.. அதிரடி ஆஃபர் அளித்த ஹோட்டல்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 14, 2019 03:21 PM

சென்னையில் உள்ள சில ஹோட்டல்கள் ‘முரட்டு சிங்கிள்’களுக்கு  பிரியாணி இலவசம் என அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

free biriyani for singles in chennai hotel

காதலர் தினமான இன்று பலரும் தங்களது காதலன்/காதலியுடன் எங்கு செல்லலாம், என்ன பரிசு கொடுக்கலாம் போன்ற பல திட்டமிடல்களுடன் இருப்பார்கள். கடற்கரை, பூங்காக்கள், திரையரங்குகள், மால்கள் என அனைத்து இடங்களிலும் காதலர்கள் ஜோடியாக காட்சியளிப்பார்கள். இவர்களது செல்போன்களில் திரைப்பட காதல் காட்சிகள், ஸ்டேட்டஸ்களாக ரயில் ஓடிக் கொண்டிருக்கும்.

ஆனால் சிங்கிள், முரட்டு சிங்கிள்களின் மீம்கள் சமூக வலைதளங்களை ஆக்கரமித்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற சிங்களுக்கு ஒரு அதிரடி ஆஃப்ர் ஒன்றை இரு ஹோட்டல்கள் அறிவித்துள்ளன.

சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் கேளம்பாக்கத்தில் உள்ள ‘மதராஸி  பிரியாணி’ கடையில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை முரட்டு சிங்கிள்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். மேலும், சென்னை மடிபாக்கத்தில் உள்ள ‘தொப்பி வாப்பா’பிரியாணி கடையும் இதுபோன்ற ஆஃப்ரை அறிவித்துள்ளது. 

ஆனால் சமுக வலைதளங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தான் பிரியாணி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஒருவேளை காதலி இருப்பதை மறைத்துவிட்டு வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, ‘நான் முரட்டு சிங்கிள்’என செல்ஃபி எடுத்து அதை பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிறகு தான் பிரியாணி என அதிரடியாக தெரிவித்துள்ளனர்.

Tags : #CHENNAI #HOTELS #BIRIYANI #SINGLE #LOVERSDAY