'நம்ம நாட்டுல யாராவது தீவிரவாதிகளை ஆதரித்தால்...துப்பாக்கியால் சுடுங்கள்'...இந்திய வீரர் ஆவேசம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 15, 2019 03:29 PM

இந்தியர்கள் யாராவது தீவிரவாதத்தை ஆதரித்தால் அவர்களை தயங்காமல் சுடுங்கள் என,ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Shoot Indians who support terrorism says wrestler Yogeshwar Dutt

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் மீது,தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினார்கள்.இந்த கோழைத்தனமாக தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.நாடு முழுவதும் கடும் கண்டன குரல்கள் எழுந்துள்ள நிலையில்,பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.இதனிடையே நமது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான,பதிவினை ட்விட்டரில் பதிந்துள்ளார் மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர் ''தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் மிகவும் கண்டனத்துக்கு உரியது.மிகவும் கோழைத்தனமானது.நாம் சோர்ந்து உட்காந்திருக்கும் நேரம் இதுவல்ல.தகுந்த பதிலடி கொடுப்பதற்கான நேரம் இது.நாம் கொடுக்கும் பதிலடி தீவிரவாதிகள் பிறப்பதற்கே,ஆயிரம் முறை யோசிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும்.இந்தியர்கள் யாராவது தீவிரவாதத்தை ஆதரித்தால் அவர்களை சுடுங்கள்'' என மிகவும் காட்டமாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்  யோகேஸ்வர் தத்.

Tags : #PULWAMAATTACK #CRPFJAWANS #JAMMUANDKASHMIR #PAKISTAN #YOGESHWAR DUTT #TERRORISM