‘இத சொல்ல இதுவா நேரம்’..இந்திய கிரிக்கெட் வீரர் மீது பாய்ந்த இணையவாசிகள்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 15, 2019 02:21 PM

புல்வாமா தாக்குதலால் நாடே சோகத்தில் இருக்கும் போது கிரிக்கெட் குறித்து டுவீட் செய்த விராட் கோலியை இணையவாசிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

Virat kohli was slammed on social media for twitter post

ஜம்மூ காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று தற்கொலைப்படை தீவிரவாதிகளால் நடந்த தாக்குதலில் 40 -க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

புல்வாமா தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலுக்கு பின் தீவிரவாதிகள் மேல் மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். தீவிரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்தரம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு கொடுத்த அனுகூலமான நாடு என்கிற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. இதனால் பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக ரீதியான அனைத்து உறவுகளும் தடைபடும் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மேலும் புல்வாமா தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் தொடர்பாக டுவிட் ஒன்றை செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இணையவாசிகள், இந்த டுவிட் போடுவதற்கு இது சரியான தருணம் இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தனர்.

Tags : #PULWAMAATTACK #VIRATKOHLI #CRICKET