'இப்படி கூட பந்து வீசலாமா'...ஆச்சரியப்பட வைத்த இந்திய வீரர்...பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 14, 2019 01:15 PM

இந்தியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷய் கர்ணிவார் தனது இரு கைகளாலும் பந்துவீசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

Akshay Karnewar plays for Ranji trophy can bowl with both hands

மகாராஷ்டிராவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷய் கர்ணிவார்.இவர் விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார்.தற்போது இரானி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.நாக்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் விதர்பா அணியும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் விளையாடிவருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப் இந்தியா அணி,முதல் இன்னிங்சில் 330 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.அடுத்தது களமிறங்கிய விதர்பா அணி,2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது

இதனிடையே ரெஸ்ட் ஆப் இந்தியா அணி பேட்டிங் செய்தபோது,சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷய் கர்ணிவார், தனது வலது மற்றும் இடது கை என இரண்டு கைகளாலும் பந்துவீசி அனைவரையும் அசத்தியுள்ளார்.பந்து வீசுவதற்கு முன்பு நடுவரிடம் இதுகுறித்து தெரிவித்து விட்டு பின்னர் வீசினார்.அக்‌ஷய் கர்ணிவார் பந்துவீசும் வீடியோவை பிசிசிஐ தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

http://www.bcci.tv/videos/id/7319/left-arm-right-arm-vidarbhas-ambidextrous-bowler

Tags : #BCCI #CRICKET #AKSHAY KARNEWAR #RANJI TROPHY