'நாங்களும் இதை செய்வோம்' இந்தியாவை பின்பற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 13, 2019 07:18 PM

இந்திய இளையோர் கிரிக்கெட் அணிக்கு முன்னாள் வீரரான டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்திருப்பது போல் பாகிஸ்தான் அணியும் இதுபோல் முன்னாள் வீரர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

Pakistan Cricket Board plans to former players coaching to youngsters

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியமித்தது. இந்நிலையில் டிராவிட் தலைமையிலான இளம் வீரர்கள் அணி பல சாதனைகளை செய்தது.

கடந்த 2018 -ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு  உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் டிராவிட்  தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. இதில் இளம் வீரரான பிரித்வி ஷா கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் இந்தியாவைப் போல் தங்களது வீரர்களுக்கு முன்னாள்  வீரரை பயிற்சியாளராக நியமிக்க திட்டமிட்டுள்ளது. அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் துணைப்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICC #PAKISTAN #CRICKET