பந்துவீச்சில் சாதனைக்கு முயன்ற மாணவர்.. பேட்டை ஸ்டைலாக சுழற்றி ஆடும் அமைச்சர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 13, 2019 05:01 PM

தற்போதைய இளைஞர்கள் கிரிக்கெட்டின் புதிய சாதனைகளைச் செய்து கிரிக்கெட்டின் பல மைல் கல்களை தகர்த்து, அடுத்த சாதனை மைல் கற்களை இன்னும் பல தூரம் நகர்த்தி வைத்துள்ளனர்.

TN- minister jayakumar playing cricket in chennai college - goes viral

கோலியின் தலைமையில் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி, சுமார் 72 வருடங்களுக்குப் பிறகு பெரும் உலக சாதனையை புரிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி விளையாடி வரலாற்று வெற்றி பெற்று தொடரை கைப்பற்றவும் செய்தது. 

குறிப்பாக சுமார் 37 வருடங்களுக்கு முன்  மெல்போர்ன் மைதானத்தில் 1981-ஆம் ஆண்டு இந்தியா வென்றது. அதன் பிறகு தற்போது 2018-இல் இந்திய அணி அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வென்றது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 37 வருடங்களுக்கு முன்பாக மெல்போர்ன் மைதானத்தில் விளையாடி வென்ற ஒருவர் கூட அண்மையில் மெல்போர்னில் விளையாடி வெற்றிபெற்ற இந்த இந்திய அணியில் இல்லை.

சொல்ல போனால் கோலி தலைமையிலான இந்த அணியில் இருந்த யாரும், 37 வருடங்களுக்கு முந்தைய அந்த மெல்போர்ன் டெஸ்ட்டில் இந்தியா வென்றபோது பிறக்க கூட இல்லை என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு துடிப்பாக தற்போதைய இளம் வீரர்கள் விளையாடுகின்றனர்.  அவ்வகையில் சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த செந்தில்குமார் என்கிற மாணவர்,  தொடர்ந்து 15 மணி நேரம் இடைவிடாமல் பந்து வீசும் சாதனை முயற்சியை தொடங்கினார்.

காலை 5.30 மணியில் இருந்து ஒரு கையை கட்டிக்கொண்டு பந்து வீசினார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூற வந்த அமைச்சர் ஜெயக்குமார், அவருடன் சிறுது நேரம் கிரிக்கெட் விளையாடிய வீடியோ செய்திகளில் வைரலாகியது.  அமைச்சர் விளையாடும்போது சுற்றியிருந்த மாணவ, மாணவிகள் விசில் அடித்தும், கரம் மற்றும் குரல் கோஷங்களை எழுப்பியும் அமைச்சரை உற்சாகப்படுத்தினர்.

Tags : #COLLEGESTUDENT #CRICKET #ACHIEVEMENT #MINISTER #TAMILNADU