'மீண்டும் டிரெண்டாகும் சின்னத்தம்பி ஹேஷ்டேக்'..காரணம் என்ன?

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 13, 2019 04:23 PM

யானை சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என பலரும் டுவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது தற்போது டிரெண்டாகி உள்ளது.

chinnathambi hashtag trending in twitter

கோவை வனப்பகுதிகளில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தியதாக வந்த புகாரை அடுத்து காட்டுயானை சின்னத்தம்பியை டாப்-ஸ்லிப் என்கிற வனப்பகுதிக்கு வனத்துறையினர் இடமாற்றினர். ஆனால் யானை சின்னத்தம்பி மீண்டும் உடுமலை அருகே உள்ள கிராமத்தில் நுழைந்தது.

இதனால் வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானை சின்னத்தம்பியை காட்டுக்குள் விரட்டினர். ஆனாலும் சின்னத்தம்பி வனத்திற்குள் செல்லாமல் மீண்டும் விளை நிலங்கள் இருக்கும் பகுதிக்கு வந்துள்ளது.

இதனையடுத்து காட்டு யானை சின்னத்தம்பியை பிடிக்க  கும்கிகளை வனத்துறையினர் வரவழைத்தனர். கும்கிகளின் உதவியுடன் யானை சின்னத்தம்பியை வனத்துறையினர் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து யானை சின்னத்தம்பி கும்கியாக மாற்றப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

இதற்கு பலத்த எதிர்ப்புகள் வந்த நிலையில் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் முடிவை தமிழக அரசு கைவிட்டது. இந்நிலையில் யானை சின்னத்தம்பியை காட்டுக்குள் விரட்டுவதில் சிக்கல் உள்ளது. அதனால் சின்னத்தம்பியை முகாமிற்கு அழைத்து செல்வதை தவிர வேறு வழியில்லை என வனத்துறை நீதிமன்றத்தில் கூறியது. இதனை அடுத்து, யானை சின்னத்தம்பிக்கு இயற்கை உணவுகளை கொடுத்து ஏன் மீண்டும் காட்டுக்குள் விடக் கூடாது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் சின்னத்தம்பியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வனத்துறையிடம் நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் யானை சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என #NoCaptivity4Chinnathambi என்கிற ஹேஷ்டேக்கை பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதை திரைப்பிரபலங்கள் பலரும் ரீ -ட்வீட்  செய்துள்ளனர்.

Tags : #NOCAPTIVITY4CHINNATHAMBI #TAMILNADU #SAVEELEPHANTS