'ஆஸ்திரேலிய தொடருக்கு இவர் திரும்ப வருவாரா'?...உலககோப்பைக்கு உறுதியான '13 வீரர்கள்'!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 15, 2019 10:14 AM

மே மாதம் தொடங்கவிருக்கும் உலககோப்பைக் போட்டிகளுக்கு வீரர்களை சோதிக்கும் விதமாக,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் வீரர்களின் தேர்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Virat Kohli Expected To Return to lead India after having been rested

நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் நிலையில்,ஜெயதேவ் உனட்கட் மற்றும் கலீல் அகமது இடையே யாரை அணியில் சேர்ப்பது என்ற கடுமையான போட்டி நிலவுகிறது.பிப்ரவரி 24ம் தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரும், மார்ச் 2ம் தேதி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் துவங்கவுள்ளது.ஆஸ்திரேலியவுக்கு எதிரான டி20 போட்டிகளில் ரோஹித் ஷர்மா களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் இரண்டாவது விக்கெட்கீப்பர் யார் என்ற குழப்பம் தொடர்ந்து நிலவி வருகிறது. பன்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இவர்கள் இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் பிசிசிஐ தொடர்ந்து யோசித்து வருகிறது.மேலும் வேலைப்பளு காரணமாக ஓய்வில் இருந்த கேப்டன் கோலி வருகின்ற தொடரில் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\

இதனிடையே உலகக் கோப்பைக்கு 13 பெயர்கள் கொண்ட வீரர்களின் பட்டியலை தேர்வு குழு உறுதி செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதில் கோலி, தவான், ரோஹித், ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், சஹால், குல்தீப், புவனேஷ்வர் குமார், பும்ராஹ் மற்றும் ஷமி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்தியா ஏ அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல்,மூன்றாவது ஓப்பனராக களமிறக்கப்பட்டு சோதிக்கப்படலாம் என தெரிகிறது.அதோடு  3 வேகப்பந்து வீச்சாளர்கள் கைவசம் இருக்கும் நிலையில்,4வது வேகப்பந்து வீச்சாளராக கலீல் அல்லது உன்ட்கட்டிற்கு வாய்ப்பளிக்கப்படலாம் என தெரிகிறது.

Tags : #CRICKET #BCCI #VIRATKOHLI #MSDHONI #INDIA VS AUSTRALIA #WORLDCUP2019