‘விராட் கோலியுடன் என்னை ஒப்பிடாதீர்கள்’..வேண்டுகோள் வைத்த இளம் கிரிக்கெட் வீரர்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 14, 2019 05:41 PM

இந்திய வீரர் விராட் கோலியை என்னுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பாபர் அஸாம் ரசிகர்களுக்கு  வேண்டுகோள் வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Watch:Don\'t compare with Virat Kohli, says Pakistan cricketer

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை முறியடுத்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக விராட் கோலி இருந்து வருகிறார்.

மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று, 71 ஆண்டுகால ஆஸ்திரேலியாவின் வரலாற்று சாதனையை கோலி தலைமையிலான இந்திய அணி முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பாபர் அஸாமை பாகிஸ்தான் ரசிகர்கள், விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசி வந்தனர். 24 வயதான பாபர் அஸாம் பாகிஸ்தான் அணிக்காக 59 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 8 சதங்களுடன்  2,462 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். 

மேலும் பாபர் அஸாம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாபர் அஸாம் கோலியை தன்னுடன் ஒப்பிட்டு பேசுவது குறித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்தார்.

அதில், ‘விராட் கோலியுடன் என்னை ஒப்பிட வேண்டாம். அவர் என்னைவிட பெரியவர். விராட் கோலி பல சாதனைகளை படைத்துவிட்டார். நான் இப்போது தான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளேன். ஒரு நாள் நானும் அவரைப் போல சாதனை படைப்பேன். அப்போது என்னை அவருடன் ஒப்பிடுங்கள்,’ என பாபர் அஸாம் கூறினார்.

Tags : #VIRATKOHLI #BABARAZAM #TEAMINDIA #PAKISTAN