'தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல்' ... நாட்டிற்காக வீரமரணம் அடைந்த 'தூத்துக்குடி வீரர்'!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 15, 2019 11:41 AM

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் வீரமரணம் அடைந்த  44 வீரர்களில்,தூத்துக்குடியை சேர்ந்த சுப்ரமணியன் என்ற வீரரும் ஒருவர்,என்ற தகவல் வெளியாகியுள்ளது.

kashmir attack 44 CRPF Jawans Died including Tuticorin Jawan

விடுப்பிற்கு சொந்த ஊர் சென்று விட்டு பணிக்கு திரும்பி கொண்டிருந்த மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் மீது,தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினார்கள்.இந்த கோழைத்தனமாக தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.350 கிலோ வெடிபொருட்களை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த தாக்குதலில்,தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கணபதி என்பவரது மகன் சுப்ரமணியன் என்பவரும் வீரமரணம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் அவரது குடும்பத்தினருக்கு இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.இதுகுறித்து தெரிவித்த தூத்துக்குடி ஆட்சியர் ''மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரபூர்வ தகவல் இன்னும் வரவில்லை.தகவல் வந்தவுடன் அரசு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags : #PULWANAATTACK #CRPFJAWANS #JAMMUANDKASHMIR #TERROR ATTACK #JAISH-E-MOHAMMAD