‘லவ் பண்ணாத்தான் வீட்டுக்கு போவேன்’..அடம்பிடித்த இளைஞரால் பரபரப்பு!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 15, 2019 10:47 AM

காதலர் தினமான நேற்று இளைஞர் ஒருவர் தன்னுடைய வாழ்க்கைத் துணையை தேடி கையில் ரோஜா பூவுடன் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

youth roams with rose in tirupur park

திருப்பூரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நேற்று காதலர் தினம் என்பதால், பூங்கா முழுவதும் காதல் ஜோடிகளால் நிறைந்திருந்தது. அப்போது ஒரு இளைஞர் மட்டும் கையில் ரோஜா பூவுடன் பூங்கா வளாகத்தை சுற்றி கொண்டே வந்துள்ளார்.

மேலும் பூங்காவில் இருந்த பெண்களிடன் தன்னுடைய காதலை வெளிப்படுத்திய வண்ணம் இருந்துள்ளார். இதனால் பூங்காவில் சற்று பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து அவரை விசாரித்ததில், அந்த இளைஞர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சண்முக பிரகாஷ் என்பது தெரியவந்தது.

பின்னர் கையில் ரோஜாவுடன் சுற்றுவது பற்றி அவர் கூறுகையில், ‘நான் பல்லடத்தில் தங்கி செல்போன் நிறுவனம் ஒன்றில் விற்பனையாளராகப் பணியாற்றி, மாதம் ரூ.15,000 சம்பாதிக்கிறேன். ஆனால் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பல வருடங்களாக பெண் தேடியும் இன்னும் அமையவில்லை’ என சண்முக பிரகாஷ் கூறியுள்ளார். 

மேலும் கூறிய அவர், ‘இதுவரைக்கும் கல்யாண புரோக்கருக்கே பல ஆயிரங்களைச் செலவு செலவழித்தாகிவிட்டது. ஆனாலும் ஒரு பயனும் இல்லை. அதனால் காதலர் தினத்தன்று இப்படி ஒரு முயற்சி செய்து, என் வாழ்க்கைத் துணையை தேடிக் கொண்டே இருக்கிறேன்’ என அந்த இளைஞர் கூறினார். 

பல மணி நேரங்களாக சுற்றிக் கொண்டே இருந்த சண்முக பிரகாஷை பூங்கா ஊழியர்கள் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.

Tags : #VALENTINES2019 #LOVERSDAY #YOUNGSTER