கொள்ளையனை பிடிக்க சென்ற காவலருக்கு நேர்ந்த கொடூரம்..பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 12, 2019 04:21 PM

ஏ.டி.எம் இயந்திரத்தை கொள்ளை அடிக்க முயன்ற மர்ம நபரை தடுத்த காவலரில் தலையில் தாக்கிவிட்டி ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

atm theft caught on cctv at perambalur

பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த  ஏ.டி.எம் மையத்திற்குள் இன்று அதிகாலை தன்னுடைய சட்டையால் முகத்தை மூடிக்கொண்டு இளைஞர் ஒருவர் செல்வதை அந்த வழியே சென்ற இருவர் பார்த்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியான அவர்கள் உடனே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே வேகமாக ஏ.டி.எம் மையம் இருக்கும் இடத்துக்கு சென்ற காவலர்கள் சென்றனர். அப்போது ஏ.டி.எம் மையத்தின் விளக்குகளை அணைத்துவிட்டு இளைஞர் ஒருவர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டு இருந்துள்ளார்.

இதனைப் பார்த்த காவலர்கள் கொள்ளையனை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது கொள்ளையன் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் ஊர்காவல் படை காவலரைத் தாக்கியுள்ளான். இதில் காவலரின் தலையில் பலத்த ஏற்பட்டுள்ளது.

உடனே அருகில் இருந்த பொதுமக்கள் கொள்ளையனைப் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர், நாமக்கல் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த தனுஷ் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் காயமடைந்த ஊர்காவல் படை வீரருக்கும், கொள்ளையனுக்கும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : #PERAMBALUR #ATM #POLICE #CCTV #VIRAL