கார்களுக்கு நடுவே சிக்கிய காட்டுயானை சின்னத்தம்பி..வைரல் போட்டோ!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 06, 2019 04:19 PM

சமீப காலமாகவே சமூக ஆர்வலர்களின் செல்லப்பிள்ளையாகி ட்ரெண்டிங்கில் இருக்கும் காட்டுயானை சின்னத்தம்பி கார்களுக்கு நடுவே அமைதியாகச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

new update about elephant chinnathambi photo goes viral

கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவதாக கூறி கடந்த மாதம் யானை சின்னதம்பியை டாப்-ஸ்லிப் வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே சின்னதம்பி  அங்கலக்குறிச்சி என்னும் கிராமத்திற்குள் நுழைந்தது. இதனால் பட்டாசு வெடித்து யானை சின்னதம்பியை காட்டிற்குள் வனத்துறையினர் விரட்டியுள்ளனர்.

இதனையடுத்து பல கிலோ மீட்டர் பயணங்களுக்கு பிறகு திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதிக்கு வந்துள்ளது சின்னத்தம்பி. இதனிடையே வனத்திற்குள் செல்ல மறுப்பதாக கூறி சின்னதம்பியை கும்கியாக மாற்றிவிடலாம் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் யானை சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் வனத்துறையினர் பாதுகாப்பில் உள்ள சின்னதம்பி தன்னை பிடிக்க வந்த கும்கி யானையுடன் நட்புடன் விளையாடி வருவதால் பலரும் யானை சின்னதம்பியைப் பார்க்க வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இரண்டு கார்களுக்கு நடுவே அமைதியாக நடந்து செல்லும் சின்னதம்பியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #CHINNATHAMBIELEPHANT #VIRAL #PHOTO