சாலை விபத்தில் அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்!

முகப்பு > செய்திகள் >

By Jeno | Feb 23, 2019 09:47 AM

திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் அதிமுக எம்.பி., ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

ADMK MP Rajendran dies in road accident

விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பியான ராஜேந்திரனுக்கு வயது 62.இதனிடையே நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுகவினருக்கு தைலாபுரம் தோட்டத்தில் நேற்று விருந்து கொடுத்தார். அதில் கலந்துகொண்ட ராஜேந்திரன், அங்கிருந்து அவரது சொந்த ஊரான வானூருக்கு நள்ளிரவில் சென்றார். இன்று காலை 4 மணியளவில் அங்கிருந்து அவரது வீடு உள்ள விழுப்புரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

திண்டிவனம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவர் சென்ற கார் சாலை தடுப்பில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் எம்.பி, ராஜேந்தி ரன், அவரது கார் டிரைவர் அருமைநாயகம் மற்றும் காரில் இருந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அந்தப் பகுதி மக்கள் அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு எம்.பி, ராஜேந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : #ACCIDENT #AIADMK #MP #MP RAJENDRAN