‘மேம்பாலத்தில் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்’.. பதறவைக்கும் காட்சிகள்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 20, 2019 10:20 AM

இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman on bike survived after thrown off the flyover

டெல்லி புதெல்லா கிராமம் அருகே உள்ள விகாஸ்புரி என்னும் பகுதியை சேர்ந்தவர் சப்னா. இவர் இரு சக்கரவாகனத்தில் பாசிம்விகாரில் இருந்து ஜானக்புரிக்கு தனது நண்பர்களான குணால் மற்றும் ஜியாவுடன் சென்றுள்ளார். அந்த இரு சக்கர வாகனத்தை குணால் ஓட்டிச் சென்றுள்ளார். குணாலுக்கு பின்னாள் ஜியா அடுத்து சப்னா என மூன்று பேரும் இரு சக்கரவாகனத்தில் பயணித்துள்ளனர்.

அப்போது விகாஸ்புரி என்னும் மேம்பாலத்தில் இவர்கள் சென்றுகொண்டிருக்கும் போது வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சப்னா வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. உடனே அந்த இருசக்கர வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. இரு சக்கரவாகனம் வேகமாக மோதியதால் நிலைதடுமாறி மூவரும் இரு சக்கரவாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர். ஆனால் சப்னா கடைசியாக அமர்ந்திருந்ததால் மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டுள்ளார்.

மேம்பாலத்தில் இருந்து சப்னா கீழே விழும் காட்சி அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், முதலில் ஒரு ஹெல்மெட் மேம்பாலத்திலிருந்து கீழே விழுகிறது. பின்னர் சப்னாவும் கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளார்.

உடனே அருகில் இருந்த பொதுமக்கள் சப்னாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத அந்த நபரை தேடிவருகின்றனர். சப்னாவுடன் பயணித்த மற்ற இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : #MUMBAI #WOMEN #ACCIDENT #BIZARRE #BIKE