'யாருக்காக இதெல்லாம்?'.. வைரலாகும் ராமதாஸின் உலகப் புகழ் ‘பொறாமை’ ட்வீட்ஸ்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 20, 2019 04:36 PM

நீண்ட வருடங்களுக்கு பிறகு அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

Ramadoss tweets about ego quotes said by world philosophers, know why

வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவின் தலைமையில் இணைந்துள்ள பாஜகவுக்கு  5 தொகுதிகளும் பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், அடுத்து வரவுள்ள 21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை கிரவுன் பிளாஸாவில் அதிமுக சார்பில் முதல்வரும் துணை முதல்வரும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸுடன் கலந்து இத்தகையை முடிவினை எடுத்துள்ளனர். பலரையும் திரும்பிப் பார்த்த இந்த கூட்டணி உறுதியான பிறகு இந்த கூட்டணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வந்தார்.

முக்கியமாக, பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுகவுடன் கூட்டணியில் இல்லாத காலகட்டத்தில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்ததையெல்லாம் மு.க.ஸ்டாலின் நினைவுபடுத்தினார். இவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ராமதாஸ் பொதுவாக பொறாமை குறித்து உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் சொன்னவற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு வருகிறார்.

எதுக்கு இப்படி பண்றாரு? என்று பலரையும் இந்த ட்வீட்டுகள் யோசிக்க வைத்தாலும் அனைத்துமே பொறாமை குறித்த ட்வீட்கள் என்பதால் நிச்சயமாக அதிமுக-பாமக கூட்டணியில் பொறாமைப் படுபவர்களுக்கு சமர்ப்பிக்கும் ட்வீட்டுகளாக இவை இருக்கும் என சமூக வலைதள வாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Tags : #AIADMK #MKSTALIN #PMK #RAMADOSS