தமிழ்நாடு அரசு விருதுகள் 2013: சிறந்த வில்லன் விடியல் ராஜூ
தமிழ்நாடு அரசு விருதுகள் 2013: சிறந்த வில்லன் விடியல் ராஜூ

விதார்த் நடிப்பில் ஆனந்த கிருஷ்ணா எழுதி, இயக்கிய திரைப்படம் ஆள். ஒரு சாமானியன் முகம் தெரியாத தீவிர கொள்கை கும்பலிடம் சிகிக் கொள்கிறான். அவர்கள் சொல்படி கேட்காவிடின், அவனது குடும்பமே சீரழிந்துவிடும். ஆனால் அந்த முகம் தெரியாத நபர் நாயகன் விதார்த்தை வைத்தே ஒரு அதிபயங்கர திட்டத்தை செயல்படுத்த முயல்கிறான் என்பதே இப்படத்தின் கதை.

ஒரு பேராசிரியருக்கு இப்படியான ஒரு பதட்டத்தை கொடுப்பதிலும் சரி, தீவிரவாதியாக மிரட்டுவதிலும் சரி, படத்தின் கருவான அந்த முகமறியாத ஆட்கள் என்கிற மெல்லியக் கோட்டிலும் சரி வில்லனாக இப்படத்தில் விடியல் ராஜூவின் கதாபாத்திரம் படத்திற்கு வேராக அமைந்தது. இப்படத்தில் சிறந்த வில்லனாக நடித்திருந்ததற்காக விடியல் ராஜூவுக்கு 2013-ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.