தமிழ்நாடு அரசு விருதுகள் 2011: சிறந்த வில்லன் பொன்வண்ணன்
தமிழ்நாடு அரசு விருதுகள் 2011: சிறந்த வில்லன் பொன்வண்ணன்

சமகாலத்தில் வந்த பீரியட் படமாக வாகை சூடவா திரைப்படம் கவனிக்க வைத்தது. செங்கல் சூளையில் கல்வியறிவு இல்லாத காரணத்துக்காக கொத்தடிமைகளாக வேலை பார்த்த மக்களை, தன்னுடைய ஆதிக்கத்தின் பிடியில் வைத்திருந்த மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் பொன்வண்ணன் நடித்திருந்தார்.

கல்வியறிவு புகுந்துவிட்டால் மக்கள் தம்மை எதிர்த்து கேள்வி கேட்பார்கள், கணக்கு கேட்பார்கள் என கணக்கு போட்டு, பல தலைமுறைகளைக்கு கல்வி கிடைப்பதையே தடுக்கும் ஆழமான உளவியல் சித்திரம் கொண்ட கதாபாத்திரம் இது. இயக்குனராகவும் நடிகராகவும் பல படங்களில் தோன்றிய நடிகர் பொன்வண்ணன், சில திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.  அவ்வகையில் வாகை சூடவா திரைப்படம் அவர் வில்லனாக நடித்த படங்களில் ஒரு மணிமகுடம் என்று சொல்லும் அளவுக்கு அழுத்தமான நடிப்பை கொடுத்திருந்தார். இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்ததற்காக நடிகர் பொன்வண்ணனுக்கு 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் நடிகர் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.