தமிழ்நாடு அரசு விருதுகள் 2009: சிறந்த வில்லன் பிரகாஷ் ராஜ்
தமிழ்நாடு அரசு விருதுகள் 2009: சிறந்த வில்லன் பிரகாஷ் ராஜ்

தமிழில் மட்டுமல்ல. தென் இந்தியா முழுவதும் தவிர்க்க முடியாத நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். இருவர் திரைப்படத்தில் நடித்ததில் இருந்தே, தேர்ந்த நடிகர் என பலராலும் புகழ்பட்டும் பாராட்டுகளை குவித்தும் வருகிற பிரகாஷ்ராஜ், மாஸ் கமர்சியல் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தவர்.

பல காலம் ஈடிணை இன்றி பல தொடர்ச்சியாக வில்லனாக நடித்திருந்திருக்கிறார். பிற்காலத்தில் தானே சொந்தமாக திரைப்படங்களை இயக்கவும் தயாரிக்கவும் செய்த பிரகாஷ்ராஜ், விஜய் திரைப்படங்களில் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். அந்த வகையில் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு திரைப்படத்திலும் பிரகாஷ்ராஜ் வில்லனாக மிரட்டி இருக்கிறார். தமக்கே உரிய உடல்மொழி, சூழ்நிலைக்கு தகுந்த டயலாக் டெலிவரியும் பிரகாஷ் ராஜின் நடிப்பில் அசரவைத்திருக்கும். இந்த படத்துக்காக பிரகாஷ்ராஜ்க்கு தமிழ்நாடு அரசின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் விருது வழங்கப்பட்டது.