தமிழ்நாடு அரசு விருதுகள் 2010: சிறந்த வில்லன் ‘களவாணி’ திருமுருகன்
தமிழ்நாடு அரசு விருதுகள் 2010: சிறந்த வில்லன் ‘களவாணி’ திருமுருகன்

1970களில் புதிய அலை சினிமா வந்தது போல, அண்மை காலங்களிலும் எதார்த்த சினிமாக்கள் மலர்ந்ததை காண முடிந்தது. அவற்றில் குறிப்பிடத்தக்க திரைப்படமாக, சற்குணம் இயக்கத்திலான களவாணி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. பெரிதாக பரீச்சயம் இல்லாத நடிகர்கள்தான் என்றாலும், அத்தனை பேரும் எதார்த்தமாக நடித்துடன் கதைக்களமும் கிராமப்புற வாழ்வியலுடன் நெருக்கமாக இருந்தது.

இந்த படத்தில் அறிமுக வில்லனாக தோன்றி தம்முடைய அசாத்தியமான நடிப்பை கொடுத்தவர் திருமுருகன். வழக்கமான வில்லன்களுக்குரிய எந்த பஞ்ச் வசனமும், அயர்ச்சியை ஏற்படுத்தும் மாஸ் தனங்களும் இல்லாமல், மிகவும் எளிமையாக, கிராமத்து தங்கைக்கு அண்ணனாக, டாஸ்மாக் ஓனராக, கிராமப்புறத்தில் ஆள்பலம் மிக்க முரடனாக, பெரியோர் சொல்லை மதித்து நடக்கு அடுத்த தலைமுறை இளைஞனாக இருந்ததே இந்த கேரக்டரின் மிகப்பெரிய பலம். அதை திரையில் கொண்டுவந்திருப்பார் திருமுருகன். தமிழ் திரையுலகில் வில்லன்கள் வரிசையில் மிகவும் எதார்த்தமான வில்லனாக வலம் வந்து, வில்லனாக அறிமுக படத்திலேயே விருது பெறும் அளவுக்கு கவனத்தை பெற்றுள்ள இவருக்கு, தமிழ் சினிமாவில் புதிய மற்றும் இயல்பான வில்லன்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வாய்ப்புள்ளதாக இயக்குநர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். களவாணி படத்தில் நடித்ததற்காக 2010-ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் நடிகர் விருது திருமுருகனுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.