தமிழ்நாடு அரசு விருதுகள் 2012: சிறந்த வில்லன் விஜய் சேதுபதி
தமிழ்நாடு அரசு விருதுகள் 2012: சிறந்த வில்லன் விஜய் சேதுபதி

இன்று முதன்மை நடிகராக விளங்கிவரும் விஜய் சேதுபதி, தொடக்கத்தில் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும், ஒரு சில திரைப்படங்களில் வந்து போகும் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். அப்படியான அவருடைய ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவாக சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது. தேசிய விருதும் பெற்றது.

இதே போல் வில்லனாக சசிகுமாரின் சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு கவனம் ஈர்ப்பு செய்தது. சிறு சிறு ஏமாற்றங்களால் விளைந்த ஈகோ, அதன் காரணமாக மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சி அடைந்த பழிவாங்கும் எண்ணம், இவை அனைத்தையும் படபடப்புடனும் கிளைமாக்ஸில் விறுவிறுப்படனும் தம்முடைய நடிப்பில் கடத்தி இருப்பார் விஜய் சேதுபதி. மிக இயல்பாக இப்படத்தின் ஒரு காட்சியில் வெட்கப்படுவார்.

இப்படி ஒரு வில்லனை தமிழ் சினிமா மிக அரிதாகவே சந்திக்கும். அதன் பிறகும் மாஸ்டர், பேட்ட என பல படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு, சுந்தர பாண்டியன் திரைப்படத்துக்காக 2012 ஆம் ஆண்டு சிறந்த வில்லன் நடிகர் விருது தமிழக அரசு வழங்கி கௌரவித்தது.