டேட்டிங் ஆப் மற்றும் கோடிங் கல்வியில் முதலீடு செய்த பிரியங்கா சோப்ரா
டேட்டிங் ஆப் மற்றும் கோடிங் கல்வியில் முதலீடு செய்த பிரியங்கா சோப்ரா

பாலிவுட் மட்டுமல்லாமல், ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா, 2018 ஆம் ஆண்டில், Bumble என்ற டேட்டிங் ஆப்பில் முதலீடு செய்துள்ளார். பெண்களை முன்னிலைப்படுத்தும் இந்த செயலியின் பிராண்டு அம்பாசடராகவும் சோப்ரா செயல்படுகிறார். Bumble மட்டுமல்லாமல், ஹோல்பெர்டன் ஸ்கூல் என்ற நிறுவனத்திலும் முதலீட்டாளராக உள்ளார். ஹோல்பெர்டன் ஸ்கூல் என்பது கோடிங் கல்வி சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமாகும்.

பாலியல் வேறுபாடுகளை களைய தீவிரமாக செயல்பட்டு செய்து வரும் நிறுவனங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூகத்தில் இவை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தில் ஒரு அங்கமாக செயல்படுவதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமையாக இருப்பதாக பிரியங்கா சோப்ரா கூறியிருந்தார்.