உணவு ஸ்டார்ட்-அப்பில் முதலீடு செய்த தீபிகா படுகோனே
உணவு ஸ்டார்ட்-அப்பில் முதலீடு செய்த தீபிகா படுகோனே

தனது கேரியரின் உச்சத்தில் இருக்கும் தீபிகா படுகோனே, ஒரு ஏஞ்சல் முதலீட்டாளராக மாறியுள்ளார். பிரபலமான யோகர்ட் பிராண்டா எபிகாமியாவை உற்பத்தி செய்யும் டிரம் ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு, தீபிகா முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தகது. இதைப் பற்றி தீபிகா படுகோனே கூறுகையில், “எபிகாமியா குடும்பத்தில் நானும் ஒரு அங்கமாக இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பொருட்களை விரும்புவதோடு மட்டுமல்லாமல், பிராண்டின் நோக்கம் பெரிதாக ஈர்த்துள்ளது. நிறுவனம் மிகப்பெரிய விரிவாக்கத் திட்டங்களைக் கொண்டுள்ளது; குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது. விரைவில் புதிய தயாரிப்புகள் பல நகரகங்களில் அறிமுகம் செய்யப்படும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.