நாளை முதல் ஜப்பானில் ‘பேட்ட’ பராக்..!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் ஜப்பானில் ரிலீசாகவுள்ளது.

Super Star Rajinikanth's Petta releasing in Japan from tomorrow

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘பேட்ட’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்தின் பழைய துள்ளலான நடிப்பை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் தனது ஸ்டைலுக்கென்றே ரசிகர்களை வைத்து சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ திரைப்படம் ஜப்பான் நாட்டில் நாளை ரிலீசாகவுள்ளது. பொங்கலுக்கு பேட்ட திரைப்படம் ரிலீசான போது ஜப்பானில் இருந்து ரஜினியின் தீவிர ரசிகர்கள் சென்னைக்கு வந்து திரைப்படம் பார்த்து பேட்ட பண்டிகையை கொண்டாடினர்.

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முத்து’ திரைப்படம் ‘டான்ஸிங் மகாராஜ்’ என்ற தலைப்பில் ஜப்பானில் வெளியானது குறிப்பிடத்தக்கது.