இன்னும் ஒரே வாரம் தான்.. திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண் சவுந்தர்யா

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், தனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Soundarya Rajinikanth in Bridemode, One week more for her wedding with Actor-businessman Vishagan Vanangamudi

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, ‘கோச்சடையான்’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், திருமணத்திற்கு தயாராகியுள்ள சவுந்தர்யா, ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் நடித்த விசாகன் வணங்காமுடி என்பவரை திருமணம் செய்யவிருக்கிறார். 

இது குறித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ஹேஷ்டேக் போட்டு தனது திருமணம் பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார். தொழிலதிபரான விசாகனுக்கும், சவுந்தர்யாவுக்கும் வரும் பிப்.11ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பெரிய நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறுகிறது.

இதையொட்டி ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் திருமண கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. திருமண கொண்டாட்டங்கள் வரும் பிப்.9ம் தேதி முதல் பிப்.11ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.