கட்டித் தழுவி அன்பை பரிமாறிக் கொண்ட ரஜினியும் கமலும்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யாவிற்கு வருகிற 11 ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி தமக்கு நெருங்கிய, முக்கிய பிரமுகர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார்.

RajiniKanth invites Kamalhaasan for his daughter marriage

அதன் ஒரு பகுதியாக நடிகர் ரஜினிகாந்த் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து திருமனத்திற்கு அழைப்பு விடுத்தார்.

பின்பு இசையமைப்பாளர் இளையராஜாவை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று தனது மகள் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.  பின்பு உலக நாயகன் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்தார்.

அப்போது இருவரும் கட்டித் தழுவி தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.