இவர் தான் சூப்பர் ஸ்டாரின் மருமகன் விசாகன், யார் இவர்?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மருமகனாக வரப்போகும் விசாகன் வணங்காமுடியை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Soundarya Rajinikanth and Vishagan Vanangamudi's new photoshoot stills went viral on the Internet

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்திற்கும், நடிகரும்-தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி என்பவருக்கும் வரும் பிப்.10ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விசாகன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொழிலதிபர் சூளூர் வணங்காமுடியின் மகனான விசாகன், அபெக்ஸ் லெபாரட்டரீஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். லண்டனில் பட்டப்படிப்பை முடித்த விசாகன் சென்னைக்கு திரும்பியதும் தனது தந்தையுடன் இணைந்து அபெக்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான அபெக்ஸ் நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குநராக இருந்தாலும், சினிமா மீது விசாகனுக்கு அதிக ஆர்வம் உண்டு. அதன் காரணமாகவே கடந்த 2018ம் ஆண்டு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

தற்போது திரைத்துறையில் இருக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்யவிருக்கிறார். இவர்களது திருமணம் போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெறவுள்ளது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்கவுள்ளனர். திருமணம் நெருங்கிவிட்ட நிலையில், ரஜினிகாந்த் தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார்.