மகளின் திருமண வரவேற்பில் விதைகள் அன்பளிப்பு கொடுத்து அசத்திய ரஜினிகாந்த்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு வருகிற பிப்ரவரி 10- ம் தேதி இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. தொழிலதிபரும் நடிகருமான விசாகனை திருமணம்  செய்து கொள்ள இருக்கிறார்.

Super Star Rajinikanth's daughter Soundarya marriage reception

இதற்காக பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களை சந்தித்து தனது மகள் திருமண அழைப்பிதழை கொடுத்து அழைப்பு விடுத்தார். மேலும் சௌந்தர்யாவும், விசாகனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இன்று சென்னையில் ரஜினியின் ராகவேந்திரரா திருமண மண்டபத்தில் சௌந்தர்யா மற்றும் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு விதைகள் அடங்கிய பை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.