எனக்கும் விஷாலுக்கும் இதுதான் பிரச்சனை - பார்த்திபன் பரபரப்பு பதில்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்ட இசை விழா கடந்த வாரம் நடைபெற்றது.

Parthiban clarifies about the Problem between Vishal and him

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளில் பரபரப்பாக செயல்பட்டு வந்த இயக்குநரும் நடிகருமான பாரத்திபன் விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக தனது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜநாமா செய்தார்.

இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்ட நிலையில் நடிகர் பார்த்திபன் Behindwoods தளத்துக்கு விளக்கமளித்துள்ளார்.

அதில், விஷால் தலைமையில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்து விவாதங்கள் நடைபெற்றது. எனக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என்ற பேச்சு அடிபட்ட போது, அருகிலிருந்த ரமணா, அவர் வேணாம் சார் என்கிறார்.

அதற்கு விஷாலும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. நீங்க எப்பவுமே அதிகமா காதலிக்கிறீங்களோ, நேசிக்கிறீங்களோ அவங்ககிட்ட தான் கோபமும் வரும். என்றார்.

எனக்கும் விஷாலுக்கும் இதுதான் பிரச்சனை - பார்த்திபன் பரபரப்பு பதில் VIDEO