பிக் பாஸையே ஒரு கை பாத்த ஓவியாவின் ‘90ML’ டிரைலர் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘குளிர் 100 டிகிரி’ படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள ‘90 எம் எல்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Much Awaited Oviyaa's 90ML Trailer released

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஓவியா, பிக் பாஸிற்கு பிறகு நடிக்கும் ‘90 எம் எல்’ திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிவிஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பாக உதீப் தயாரிக்கும் இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

அழகு நிலையத்தில் வேலைப்பார்க்கும் பெண்ணாக நடித்துள்ள ஓவியாவும், அவரது மிடில் கிளாஸ் தோழிகளும் தங்களது எண்ணங்களை பகிர்ந்துக் கொள்வதே இப்படத்தின் பிரதான காட்சிகள் என கூறப்படுகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸையே ஒரு கை பாத்த ஓவியாவின் ‘90ML’ டிரைலர் இதோ VIDEO