டப்ஸ்மேஷ் பிரபலம் நடித்த டூப்ளிகேட் டீசர் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘உத்தரவு மகாராஜா’ திரைப்படத்தில் நடித்த நடிகர் உதயாவின் ஜேசன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ‘டூப்ளிகேட்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

Dubsmash fame Mirnalini Ravi's 'Duplicate' Teaser released

இப்படத்தை இயக்குநர்கள் சசிக்குமார், சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக இருந்த சுரேஷ் குமார் என்பவர் இயக்கி வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவாகியுள்ள இப்படம், ஒரு பெண். ஒரு கார் என ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

த்ரில்லர் ஜானர் கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான இந்த டீசரில் காருக்குள் இருக்கும் கதாநாயகியை அமானுஷ்ய சக்தி ஒன்று மிரட்டுவது போன்று காட்சிகள் அமைந்துள்ளன.

இப்படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர நடிகை மிருணாளினி தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

டப்ஸ்மேஷ் பிரபலம் நடித்த டூப்ளிகேட் டீசர் இதோ VIDEO