யாரோ சுட்ட வட மாதிரி இருக்கே - சிம்புவுடன் நடிப்பது குறித்து சித்தார்த்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ட்விட்டரில் ஒருவர்,  நடிகர் சிம்பு, சரத்குமார் மற்றும் சித்தார்த் உடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்து நெருங்கிய வட்டாரங்கள் அளித்த தகவலின் படி, நானே சுட்டேன் என பெயரிடப்பட்டுள்ள இந்த மேற்சொன்ன இரண்டு நடிகர்களுடன் சிம்பு முதல்முறையாக நடிக்கவிருக்கிறார்.  இந்த படத்தில் சிம்பு சுவாரஸியமான வேடம் ஒன்றை ஏற்கவுள்ளார் என பதிவிட்டிருந்தார்.

Siddharth clarified the Rumour he will act with STR

இதற்கு பதிலளித்த நடிகர் சித்தார்த்,  இந்த செய்தி எல்லாம் யாரோ சுட்ட வட மாதிரி இருக்கே .... ரூம் போட்டு யோசிக்கிறீங்களோ ? இதுல நெருங்கிய வட்டாரங்கள் அளித்த தகவல் வேற!  நடத்துங்க   என்று கூறியுள்ளார்.

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படம் அரசியல் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.