'வந்தா ராஜாவா தான் வருவேன்'... சொன்னதைச் செய்த சிம்பு?

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 05, 2018 11:44 AM
STR\'s next film titled as Vandha Rajava Dhaan Varuven

சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த 'செக்க சிவந்த வானம்' படத்தில், சிம்பு பேசிய வசனமே அவரது அடுத்த படத்தின் தலைப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய வேடங்களில் மஹத், கேத்தரின் தெரசா ஆகியோரும் நடித்து வருகின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு, ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து வருகிறார்.

 

இந்தநிலையில் இப்படத்துக்கு 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என, 'செக்க சிவந்த வானம்' படத்தில் சிம்பு பேசிய பிரபல வசனம் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #SIMBU #CCV #SUNDARC