'பாக்க பக்கத்து வீட்டுக்காரர் போல இருந்தாரு'... இந்திய அளவில் ட்ரெண்டான போட்டோ...யார் அந்த பிரபலம்?

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 29, 2019 11:08 PM

கோவா'வைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எடுத்துக்கொண்ட புகைப்படம் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.

Selfies For Rahul and Sonia Gandhi in Private Goa Visit

கோவாவில் உள்ள பிரபல கடல் உணவகம் ஒன்றில் பல் மருத்துவர் ரச்னா பெர்னாண்டஸ், தனது குடும்பத்துடன் சாப்பிட்டு கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு அருகில் உள்ள மேஜையில் ராகுல் வந்து அமர்ந்துள்ளார்.உடனே அவரை அடையாளம் கண்டுகொண்ட ரச்னா,ராகுலை பார்த்து சிரித்துள்ளார்.ராகுலும் பதிலுக்கு ரச்னாவை பார்த்து சிரித்துள்ளார்.உடனே உங்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என ரச்னா கேட்க அதற்கு ராகுல் ''நிச்சயமாக எடுத்து கொள்ளலாம்.ஆனால் அதற்கு முன்பு எனது பில் தொகையை செலுத்திவிடுகிறேன் என பதிலளித்தார்.

ராகுலை சந்தித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட ரச்னா ''ராகுல் மிகவும் அதிசயமான மனிதர்.அவர் எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்தார்.அவரை பார்க்கும் போது பக்கத்து வீட்டு பையன் போன்ற உணர்வு தான் ஏற்பட்டது என,ரச்னா பெர்னாண்டஸ் தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Awed by his charm and modesty 😍 #rahulgandhi

A post shared by Rachna Fernandes (@rachna_the_dentist_fernandes) on

Tags : #RAHULGANDHI #SONIA GANDHI #GOA #RACHNA FERNANDES