நாடாளுமன்றத்தில் கைகலப்பு;ராஜபக்சே வெளிநடப்பு; உலக அரசியலின் கவனம் ஈர்க்கும் இலங்கை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 15, 2018 11:40 AM
Ranil statement after proving majority in the Sri Lanka Parliament

ராஜபக்சேவிற்கு பெரும்பான்மை இல்லை என நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டது என்று ரணில் விக்ரமசிங்கே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க தகவல் தெரிவித்துள்ளார்.

 

மேலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால், இலங்கை நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று வரை ஒத்திவைப்பு என சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.  முன்னதாக  இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் இருந்து நேற்று ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.

 

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் நேற்றைய தினத்தை போன்ற ஒரு கருப்பு தினத்தை நான் பார்த்ததில்லை என்றும் அதிபராக இருந்த தனக்கு பிரதமர் பதவி முக்கியமானதல்ல என்றும் இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசியுள்ளார்.

Tags : #SRILANKA #RANIL #POLITICS #WORLD #RAJABAKSE #MAHINDA RAJAPAKSA