'மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்'.. ஓவியா ஆர்மிகளே தயாராக இருங்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 13, 2018 05:48 PM
Oviya to act in a cameo in Arav\'s Rajabheema Movie

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஹீரோவாக நடித்து வரும் ராஜபீமா படத்தில் நடிகை ஓவியா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இதுகுறித்து நடிகர் ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில்,''சிறப்புத் தோற்றம் மட்டுமல்ல, மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும். ஓவியா ஆர்மிகளே..தயாராக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

 

ராஜபீமா’ படத்தில் ஹீரோவாக ஆரவ் நடித்து வருகிறார்.ஆஷிமா நர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில், ஆரவ்வுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு நடனமாடியுள்ளார் ஓவியா. இதன்மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பிக் பாஸ்’ ஜோடி இணைந்திருக்கிறது.

 

மறுபுறம் ஓவியா காஞ்சனா 3, சிலுக்குவார்பட்டி சிங்கம், 90 எம்எல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #OVIYA #ARAV