கட்சி தலைமையின் காலில் தொண்டர்கள் விழ வேண்டாம்.. அது அடிமைத் தனம்.. ’தி.மு.க’ ஸ்டாலின்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 31, 2018 06:41 PM
No Need to fall on Supremos leg MK Stalin New Rules

அண்மையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது மகனும் திமுகவின் அப்போதைய செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுகவின் தலைவராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் தனது கட்சித் தொண்டர்களுக்கு சில வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார்.

 

அதன்படி, கட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவு பேனர் வைப்பதை தவிர்க்குமாறும்,  கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி தலைமையின் காலில் விழுவதை தவிர்க்குமாறும், இந்த அடிமைத் தனங்கள் இனி வேண்டாம்; கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் லட்சியத்தை மட்டும் உயர்த்தி பிடித்து கட்டிக்காப்போம் என்றும் கூறியுள்ளார்.

Tags : #MKSTALIN #DMK #MKARUNANIDHI #DMKBANNER