வாவ்..ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர்னா இப்படித்தான் இருக்கணும்- வைரல் வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 01, 2018 10:35 PM
Mary Kom\'s new training partner here- Watch Video!

விளையாட்டுத்துறை அமைச்சர்னா இப்படித்தான் பா இருக்கணும் என, அனைவரையும் வாவ் சொல்ல வைத்திருக்கிறார் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்.

 

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் சார்பில் டெல்லியில் வரும் 15-ம்தேதி முதல் 24-ம் தேதி வரை பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது. இதில் 70 நாடுகளில் இருந்து சுமார் 300 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 

 

இப்போட்டியில் இந்தியா சார்பில் மேரிகோம் (48 கிலோ), சரிதா தேவி (60 கிலோ), பிங்கி ஜங்ரா (51 கிலோ), சீமா பூனியா (81+ கிலோ) உள்ளிட்ட 10 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதற்காக டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் வீராங்கனைகள் அனைவரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்தநிலையில், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்வதைக் காண மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் இன்று இந்திரா காந்தி ஸ்டேடியம் சென்றார்.

 

அங்கு வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய ராஜ்யவர்தன் மேரி கோமுடன் நட்பு ரீதியில் குத்துச்சண்டை போட்டார்.ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற முன்னாள் வீரரான ரத்தோர், ஸ்டேடியத்திற்கு வந்து கலந்துரையாடியது, வீராங்கனைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மந்திரி தன்னுடன் குத்துச்சண்டை போடும்போது  எடுத்த வீடியோவை மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த  வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 

 

Tags : #TWITTER #RAJYAVARDHANSINGHRATHORE #MARYKOM