'மீண்டும் புயல் உருவாகிறதா?'...வருகிறது கன மழை...வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 12, 2018 09:46 PM
Heavy rain chances in Tamilnadu

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக,சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது-"வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை பெற்றிருக்கிறது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

 

இதன் பின்னர், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திரா, வடக்கு தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதனால் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

 

இதன் காரணமாக ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் மாலையே கரை திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு பாலச்சந்திரன் கூறியுள்ளார்.