வெளுத்து வாங்கும் மழை: 'இந்த மாவட்டங்களில்' மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 04, 2018 08:28 AM
Due to Heavy rain, School holiday declared for 2 Districts

அடுத்த 3 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 

இந்த நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

 

இதேபோல நாகையில் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.