'ஏன் எல்லாரும் இதையே கேக்குறீங்க' .. காண்டான கூகுள் ட்விட்டரில் வைரல் கேள்வி!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 29, 2019 01:32 PM

கூகுளிடம் தொடர்ந்து பயனாளிகள் பலர், ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என்று கேட்டதால் கொந்தளித்த கூகுள் ஒரு அதிரடியான ட்வீட்டினை பதிவிட்டுள்ளது.

Google angry after facing questions from users - replies sarcastically

இன்றைய சூழ்நிலையில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. அதனால் மொழி தெரியாதவர்களும் தங்களுக்கு தேவையானவற்றை தேடுவதற்கு உதவும் வைகயில் கூகுள் நிறுவனம் கூகுள் அசிஸிடண்ட் என்ற வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த கூகுள் அசிஸ்டெண்ட் என்பது செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இது மனிதர்கள் பேசும் சத்தத்தை மொழி மூலம் உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்றவாறு தகவல்களை வழங்குகிறது.

இந்த வசதியை தவறாக உபயோகிக்கும் பலர் கூகுள் அசிஸ்டெண்டிடம் தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா கூகுள் ? என விளையாடும் விதமாக கேள்விகளைக் கேட்டுவந்துள்ளனர். இதுபோன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததால் கடுப்பான இந்தியாவின் கூகுள் தலைமை நிறுவனம் ஒரு அதிரடியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ள்ளது.

அதில், ‘எங்களுக்கு உண்மையாக..தெரியவேண்டும், ஏன் கூகுள் அசிஸ்டெண்டிடம் திருமணம் செய்துகொள்வாயா என்று எல்லாரும் கேட்கிறீர்கள் ?  என ட்வீட் செய்யப்பட்டிருந்தது. இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பலரும் நகைச்சுவையாக ரீ-ட்வீட் செய்துவருகின்றனர்.

அதில் ஒருவர்,’நீ மட்டும் ஏன் நாங்கள் செல்லும் லொகேஷனை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறாய், அந்த லொகேஷனுக்கு நீ வந்துகொண்டே இருக்கிறாய்?’ என்று கூகுளை திருப்பி கேட்டுள்ளார். 

Tags : #GOOGLE #GOOGLEASSISTANT #INDIA #VIRA #TWEET