49 வயது மன்னரை மணந்து ரியல் குயினாக மாறிய 25 வயது மிஸ்.குயின்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 28, 2018 12:58 PM
former miss queen becomes the real ‘Queen’ after marrying this king

ரஷ்யாவின் முன்னாள் மிஸ்.குயின், மலேசியாவின் கேளண்ட்டனைச் சேர்ந்த மன்னர் முஹமதுவினை திருமணம் செய்து கொண்டதால் உண்மையில் மலேசியாவின் குயினாக (ராணியாக) மாறியுள்ளார். ரஷ்யாவின் 2015-ஆம் ஆண்டின் மிஸ்.குயின் பட்டத்தை வென்ற அக்சனா வீவோடினா (வயது 25) சீனா மற்றும் தாய்லாந்தில் மாடல் அழகியாக வலம் வந்தார். இதனிடையே 2016க்கு பின்னர் முஹமதுவும் மன்னரானார்.


எனினும் பொண்ணு ஊரான மாஸ்கோவில் பிரம்மாண்டமாக திருமணம் நிகழ, அழகி அக்சனவோ, இஸ்லாத்துக்கு மதம் மாறிய  பின்னர் ரிஹானா என்கிற பெயரை சூட்டிக்கொண்டுள்ளார்.இதனையடுத்து ‘ரிஹானா அக்சனா  என்கிர பெயருடன் கோலாலம்பூரில் 49 வயதான மலேசிய மன்னர்  முஹமது என்கிற யங் டி பெர்சுவன் அகோங், மற்றும் ரிஹானா அக்சனா இருவரும் பாரம்பரிய மன்னர் வம்ச உடையில் இஸ்லாத் முறையில் திருமணம் செய்துள்ளனர்.


பெரிய கூட்டமும், ஆரவாரமும் இல்லாமல், அரசமுறை உறவுகளுக்கு மத்தியில் எளிமையாக திருமணம் செய்துகொண்ட இவர்களின் திருமண புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன. எனினும் வயது வித்தியாசங்களைக் கடந்து இவர்களின் காதல் மலர்ந்து திருமணத்தில் வந்து நின்ற கதையை இன்னும் இவர்கள் யாருக்கும் ரிவீல் செய்யவில்லையாம். விடுகதை!

 

Tags : #MODEL #RUSSIA #MISSQUEEN #WEDDING #MALAYSIAN KING #OKSANA VOEVODINA #MOSCOW #VIRALLED #RUSSIAN BEAUTY #KUALALUMPUR #TWEET #PHOTOS