வெடித்துச் சிதறிய விமானம்.. உருகவைக்கும் பைலட்டுகளின் இறுதி நொடிகள்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 03, 2019 03:49 PM

விமானப் படையைச் சேர்ந்த விமானம் விபத்துக்குள்ளாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Flight Gets Crashes in Bengaluru and two officers dead

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் சித்தார்த் நேகி மற்றும் சமீர் அப்பால் என்கிற இரு பைலட்டுகள் மிராஜ் 2000 என்கிற போர் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால்  உடனடியாக விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க பைலட்டுகள் முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் விமானம் தரையில் மோதி தீ பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து தப்பிக்கும் பொருட்டு இரு பைலட்டுகளும் விமானத்திலிருந்து வெளியே குதித்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த பைலட் சித்தார்த் நேகி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மற்றொரு பைலட்டான சமீர் அப்பாலை உடனடியாக ராணுவ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி சமீர் அப்பாலும் உயிரிழந்தார்.

மேலும் விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. விபத்து தொடர்பாக பெங்களூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #BENGALURU #FLIGHTCRASH #PILOT #INDIANAIRFORCE