அவரை ஏன் ரிஜெக்ட் பண்ணீங்க?... 'ஸ்கூல்பாய் பாலிட்டிக்ஸை காட்டுற நேரமா இது'?...கடுப்பில் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 16, 2019 11:09 AM

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கு,அறிவிக்கப்பட்ட அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெறாதது,கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Dinesh Karthik Dropped for Australia ODIs

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகளிலும் 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட இருக்கிறது.இதற்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று அறிவித்தது.இந்த பட்டியலில் இடம்பெறும் வீரர்கள் தான் உலகக்கோப்பைக்கான உத்தேச அணியாக இருக்கும் என்று கூறப்பட்டதால்,கடும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில்,தினேஷ் கார்த்திக், டி20 தொடரில் மட்டும் இடம்பிடித்துள்ளார்.ஒரு நாள் போட்டியில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை.ரிஷாப் பன்ட் இரண்டு தொடர்களிலும் இடம்பிடித்துள்ளார்.தொடர்ந்து மோசமாக ஆடி வரும் கே.எல்.ராகுல்,மாற்று தொடக்க வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.இதனால் உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைப்பது கடினம் என கூறப்படுகிறது.இது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோசமாக ஆடி வரும் கே.எல்.ராகுலிற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக நன்றாக ஆடியும்,தினேஷ் கார்திக்கை அணியில் சேர்க்காதது ஏன் என ரசிகர்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் இது போன்ற 'ஸ்கூல்பாய் பாலிட்டிக்ஸை' ஏன் வீரர்களின் தேர்வில் காட்டுகிறீர்கள் என கடுமையாக சாடியுள்ளார்கள்.மேலும் உலககோப்பையிலிருந்து தினேஷ் கார்திக்கை கழற்றி விடும் செயலே இது என,தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

Tags : #CRICKET #BCCI #DINESHKARTHIK #AUSTRALIA ODIS #WORLDCUP2019