பேருந்தில் மோதி தூக்கி வீசப்படும் இளைஞர்கள்...மதுபோதையால் விபரீதம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 24, 2018 12:45 PM
3 men miraculously surviving in Madurai after they came under the whea

மதுரையில் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் மீது, அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்.இதில் அதிர்ஷ்டவசமாக 3 இளைஞர்களும் உயிர் பிழைத்தார்கள்.

 

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே  இரு சக்கர வாகனத்தில்  3 இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர்.அப்போது சாலையின் சந்திப்பில் வேகமாக திரும்பும்போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்.தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அரசு பேருந்து ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் 3 இளைஞர்களும் உயிர் தப்பினார்கள்.

 

காவல்துறையினரின் விசாரணையில் 3 இளைஞர்களும் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து அந்த 3 பேர் மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.விபத்தானது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வைகை ஆற்றுப்பாலம் அருகே நிகழ்ந்த இந்த விபத்து குறித்த  சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #MADURARI