'அரசியலை நல்லா கத்துக்கிட்டு சரியான நேரத்தில் வருவேன்'.. வரலட்சுமி சரத்குமார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 03, 2019 04:05 PM

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த்தின் வீட்டிற்குச் சென்று சந்தித்தார்.

‘will enter into the politics at the right time’, actress varalaxmi

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார்,  விஜயகாந்தின் உடல் நலம் பற்றி விசாரித்துவிட்டு, தமிழக அரசியல் சூழல் மற்றும் பணம் வாங்காமல் மக்கள் வாக்களிக்க வேண்டிய அவசியம் பற்றி பேசியதாகவும் தெரிவித்தார். மேலும் தன்னைப் பொருத்தவரை தான் யாருடனும் இன்னும் கூட்டணி பற்றி பேசவில்லை என்றும், ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள் என்றும், நல்ல கட்சியே நாடாள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.  அதுமட்டுமல்லாமல் ச.ம.க. தங்கள் நிலைப்பாட்டை வரும் 5-ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் மகளிருக்கான நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட வரலட்சுமி சரத்குமாரிடம் இந்த சந்திப்பு குறித்தும், சரத்குமாரின் அரசியல் குறித்தும் கருத்து கேட்டதற்கு நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமார், நமக்கு நாமேதான் பாதுகாப்பு, தற்காப்பு என்பது பெண்களுக்கு மிக அவசியமான ஒன்று என்றும் சமூக வலைதளங்களை முறையான வழிகளில் பயன்படுத்த வேண்டும் என்றும் பேசியுள்ளார்.  மேலும் சரத்குமாரின் அரசியலுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறிய வரலட்சுமி, அரசியலை நன்றாக கற்றுக்கொண்டுவிட்டு, பிறகு சரியானதொரு நேரத்தில் தான் அரசியலுக்கு வரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் விஜய்யுடன் சர்கார் திரைப்படத்தில் முக்கியமான அரசியல் கதாபாத்திரத்தில் நடித்த வரலட்சுமி பிஹைண்ட்வுட்ஸின் கோல்டு மெடல் விருதுவிழாவில், எதிர்காலத்தில் தான் அரசியலுக்கு நிச்சயமாக வரவிருப்பதாகவும் பூடகமாகச் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #VARALAXMI SARATHKUMAR #POLITICS #ACTRESS